கடவத்தை – இஹல பியன்வில பகுதியில் நேற்று (04) இரவு நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இருவர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த மேலும் இருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், தப்பியோடியுள்ள மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காகக் கடவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
