நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) கைதிகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்த மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
