Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்கள் பாம்பனில் பறிமுதல்

ஆடி 7, 2026
படிக்க 2 நிமிடங்கள்

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்கள் இன்று (7) காருடன் பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் காரில் இருந்த மதுரையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் மண்டபம், மரைக்காயர் பட்டினம், வேதாளை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகில் சமையல் மஞ்சள், கடல் அட்டை, மெத்தப்பெட்டமன், கஞ்சா ஆயில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதுடன் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு கடல் வழியாக தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் கியூ பிரிவு,மத்திய, மாநில உளவுத்துறை, கடற்படை, கடலோர காவல்படை, சுங்கத்துறை, மரைன் பொலிஸ் என பாதுகாப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகில் இலங்கைக்கு பந்தய புறாக்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு ராமநாதபுரம் ஆய்வாளர் ஜீவ மணிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (06)நள்ளிரவு கியூ பிரிவு பொலிஸார் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் பாலத்தில் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.

இன்று (07) அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்த கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் பாம்பன் சாலை பாலத்தில் வெகு நேரம் நின்று கொண்டு இருந்ததை கண்ட கியூ பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் சுற்றி வளைத்து காருக்கு அருகே நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த கியூ பிரிவு பொலிஸார் காரை திறந்து சோதனை செய்தபோது காருக்குள் 6 இரும்பு கூடுகளில் 120 புறாக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காருடன் பந்தய புறாக்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் காரில் வந்த இருவரையும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே காரை கியூ பிரிவு பொலிஸார் புறாவுடன் காரை பறிமுதல் செய்த பின் கியூ பிரிவு பொலிஸார் பாம்பன் வடக்கு கடற்கரையில் சோதனை செய்ய சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த படகு ஒன்று கியூ பிரிவு பொலிஸாரை கண்டதும் அங்கிருந்து கடலுக்குள் தப்பி சென்றது.

இனையெடுத்து தப்பிச் சென்ற படகு குறித்து மரைன் பொலிஸார் உதவியுடன் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் பந்தய புறாக்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டது என ஒப்புக் கொண்டனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

ஆனி 25, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பொதுச் சுகாதார பரிசோதகர் போல நடித்து கடைகளில் பணம் கோரிய குழு தொடர்பில் புகார்!

ஆனி 11, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ChatGPT சேவையில் திடீர் கோளாறு

ஆடி 8, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை ‘நிசல செவன’ மயானத்தில் துப்பாக்கிச்சூடு

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube