Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் 40 கைதிகள் உயிரிழப்பு-வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஆடி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோய் பரவியதால் சுமார் 40 கைதிகள் உயிரிழந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் அளித்துள்ளார்.

இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், டெங்கு நோயினால் 40 கைதிகள் உயிரிழந்ததாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்.

“அது முற்றிலும் பொய்யான ஒரு கதை. 40 பேர் இறந்திருந்தால் அதற்கான உடல்கள் இருக்க வேண்டுமே? எந்தவொரு நோயாளிக்கும் தேவையான சிகிச்சைகள் அங்கு உள்ளன. யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால், (கடந்த நாட்களில்) சிலருக்கு காய்ச்சல் இருந்தது. அதற்கு முந்தைய நாள் அவ்வாறு ஒருவரே பதிவாகியிருந்தார், அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. வைத்தியர்கள் அல்லது சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை. சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க முடியாவிட்டால், அதற்கு அருகிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கு அவர்கள் மாற்றப்படுவார்கள். அதுதான் எங்களது நடைமுறையாகும்.” என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய 9 பேருக்கு விளக்கமறியல்

ஆடி 26, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

திருமண ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு – மணமகன் உயிரிழப்பு!

வைகாசி 2, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து மறுவடிவமைப்பு குழுவின் முக்கிய சந்திப்பு!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube