2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜூலை 3 முதல் 23ஆம் திகதி நள்ளிரவு வரை இணையத்தளம் ஊடாகச் சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இணையத்தளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பதிவு செய்யலாம்.
விண்ணப்பங்களை http://www.doenets.lk அல்லது http://www.onlineexams.lk/eic ஆகிய இணையத்தளங்கள் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்.
ஜூலை 23ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், இறுதித் திகதி எந்தக் காரணத்திற்கும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
