Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணையில் பயணித்த வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் பயணித்த வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் ஹோர்மூஸ் நீரிணை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவுடனான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை நிலவி வந்த சூழலில், ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்னர் நிலவிய சூழல் இன்னும் முழுமையாகத் திரும்பவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

எனவே, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் ஈரான் அறிவிக்கும் கடல் வழியைப் பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஓமான் அருகே பயணித்த வர்த்தகக் கப்பல் ஒன்றை அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதாகப் பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் ஒரு கப்பல் தாக்குதலுக்குள்ளாகி ஓமான் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கப்பல்களும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும், எனினும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் தாக்குதல்களை நிறுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு வாரகால உடன்படிக்கை காலாவதியான நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

போரினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் – அண்ணாமலை

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் எச்சரிக்கை!

ஆனி 8, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube