மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட திர்மானித்தது.
இதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ஓட்டங்களை பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் (101) மற்றும் ஜான் கேம்ப்பெல் (62) ஆகியோர் அதிகபட்ச ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணி சார்பில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
296 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 300 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றது,
இந்திய அணி சார்பில் தலைவர் சுப்மன் கில் 110 ஓட்டங்களையும், விராட் கோலி 139 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தப்போட்டியில் விராட் கோலி தனது 55 ஆவது ஒருநாள் சதத்தையும், சுப்மன் கில் தனது 10 ஆவது ஒருநாள் சதத்தையும் பூர்த்தி செய்துகொண்டதோடு போட்டியின் ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
