சுங்க அனுமதியின்றி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இரண்டு வாகனங்களை சட்டவிரோதமாக பதிவு செய்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பில், ஹோமாகம – பிட்டிப்பனை பகுதியைச் சேர்ந்த ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து, வாகனங்களை கணினி அமைப்பில் சட்டவிரோதமாக பதிவு செய்து பதிவு சான்றிதழ்களைப் பெற உதவியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர், ஜூலை 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
