Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த போதை பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்

ஆடி 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜ.ஆர்.சி பட்டியலில் உள்ள பிரபல போதை பொருள் வியாபாரியான 31 வயதுடையவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (8) உத்தரவிட்டார்.

குறித்த நபரின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீட்டில் வசித்து வரும் உறவினரின் மகளான 13 வயது 4 மாதங்களை கொண்ட சிறுமியை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். சிறுமியின் தந்தை குடிக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பெற்றோரிடையே சண்டை காரணமாக சிறுமி குறித்து பெற்றோர் கவனமின்றி இருந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ தினமான 6ம் திகதி திங்கட்கிழமை இரவு குறித்த நபரின் தாயாருடன் அங்கு நித்திரைக்கு சென்றுள்ளார். இதன்போது நள்ளிரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் சிறுமியை தன்னுடன் வருமாறு குறித்த நபர் கேட்டபோது சிறுமி பயந்து அலற முற்பட்டபோது, சிறுமியின் வாயை கைகளால் மூடி சிறுமியை தூக்கி சென்று வீட்டிற்கு பின்பகுதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றின் கம்பி வேலியால் சிறுமியை தூக்கி விட்டுவிட்டு குறித்த நபர் கம்பி வேலியை கடக்க முற்பட்ட போது சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி சத்தமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியை மீண்டும் பிடித்து வாயை மூடி குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டதையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர் குறித்த நபரின் உறவினர் என்பதால் அதனை மூடி மறைத்ததுடன் பொலிசாருக்கு புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்

இதனையறிந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் 1195 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (7) இரவு குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரம் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளி வந்துள்ளதுடன், பொலிசாரின் நாட்டில் குற்றவாளிகள் உள்ள குற்றவாளிகள் பட்டியலான ஜ.ஆர்.சி பட்டியலில் சேர்க்கப்பட்ட குற்றவாளியான குறித்த நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (8) ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டாரவளையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழிகாட்டல் கண்காட்சி!

ஆடி 19, 2026
இலங்கைஉலகம்

தொழிலாளர் உரிமைகள் உடன்படிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு ILO தலைமைப் பணிப்பாளர் பாராட்டு!

ஆனி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

உலகக் கிண்ணப் பரிசளிப்பு விழா – ட்ரம்ப் பங்கேற்பு

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டண திருத்தம் வேண்டும் – இல்லை என்றால் மானியம் வேண்டும்!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube