அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) புதிய தலைவராக வைத்தியர் சந்திக எபிடகடுவ (Dr. Chandika Epitakaduwa) அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அச்சங்கத்தின் 2026/27 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றதுடன், இதன்போது அவர் இப்பதவிக்காக தெரிவு செய்யப்பட்டார்.
இது தவிர, சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக வைத்தியர் பண்டார வரகாகொட (Dr. Bandara Warakagoda) அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
