Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை!

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டாம் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதாக, சோமரத்ன ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட தகவல் குறித்து, முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே ஊடாக, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மூலம் தமக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாகவும், அது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவினால் அனுப்பப்பட்டது எனவும் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், மனிதப்புதைகுழி குறித்து எதனையும் கூறவேண்டாம் எனவும், பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

சோமரத்ன ராஜபக்சவின் இந்தத் தகவல்களின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர்.

செம்மணி மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

டெங்கு நோயாளர்கள் 35,000ஐ தாண்டி மரணங்கள் 20 ஆக உயர்வு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொடை தானசாலை விபத்து – வாகன உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் இதுவரை 56 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எபோலா வைரசுக்கு 3 தடுப்பூசிகள்!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube