Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைதொழில்நுட்பம்

பேஸ்புகில் AIனால் உருவாக்கப்பட்ட போலி கணக்குகள் – மோசடி மற்றும் ஆபாச உரையாடல்களில் சிக்க வைக்கும் முயற்சி!

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் பேஸ்புகில் (Facebook) செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட போலிப் பெண் சுயவிவரங்களைப் பயன்படுத்தி, பயனர்களை மோசடி மற்றும் ஆபாச உரையாடல்களில் சிக்க வைக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கலாநிதி சஞ்சனா ஹட்டோட்டுவ எச்சரித்துள்ளது.

போலியான பெண் அடையாளங்களைப் பயன்படுத்தி, பயனர்களை வயது வந்தோருக்கான சேவைகள், சூதாட்டத் தளங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்கு திசைதிருப்புவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நூற்றுக்கணக்கான கணக்குகள் ஒரே மாதிரியான பதிவுகளைப் பகிர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இவை பெரும்பாலும் தனிமை அல்லது துணை தேடும் பெண்களாகச் சித்தரிக்கப்பட்டு, பயனர்களை வட்ஸ்அப் போன்ற தனிப்பட்ட உரையாடல் தளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.

இந்த சுயவிவரங்கள் அனைத்தும் போலியானவை என்பதால், பயனர்கள் தாங்கள் உரையாடுவது உண்மையான நபருடனா அல்லது செயற்கை நுண்ணறிவுடன் தானா என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளது.

முன்பின் தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட உரையாடல்களைத் தவிர்க்குமாறும், அவர்கள் பகிரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Links) கிளிக் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இத்தகைய மோசடிகளைத் தடுக்க பேஸ்புக் (Facebook) நிறுவனம் தனது பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை வலுப்படுத்த வேண்டும் என இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தலைமன்னார் தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் மெனின்ஜைடிஸ் மூளைக்காய்ச்சல் நோய்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நன்னடத்தை ஆணையாளர் பதவிக்கு யு.எல்.மதீஷா நியமனம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட 7 வயது சிறுவனின் நடைபயணம் பொலிசாரால் தடுப்பு!

வைகாசி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube