வெல்லம்பிட்டிய பகுதியில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய வியாபாரி ஒருவர் ஹெரோயின், ஐஸ் (Ice) மற்றும் போதை மாத்திரைகளுடன் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கடந்த 2026.07.06 அன்று வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமகிலிய பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள நீர் தேக்கத் தொட்டிக்கு அருகே இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் கொலன்னாவை, தகம்புற பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 120 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 112 கிராம் ஹெரோயின் மற்றும் 25 ‘டான்சிங்’ (Dancing) போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 32 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
