Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் – மக்கள் பாவனைக்குக் கையளிப்பு

ஆடி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கு நன்மையளிக்கும் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) வெள்ளிக்கிழமை பிற்பகல் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.

சீன அபிவிருத்தி வங்கி வழங்கிய சலுகைக் கடனின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், 2022 மே மாதம் முதல் 2024 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், இதன் தேசிய முக்கியத்துவம் கருதி, இலங்கை அரசாங்கத்தின் நிதியையும் பயன்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இத்திட்டத்தின் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன.

இப்பகுதியில் வேகமாக பரவி வரும் நாட்பட்ட சிறுநீரக நோய்க்கு ஒரு தீர்வாக நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர் வழங்கல் திட்டம், இப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்யும்.

இதன் மூலம் 25,000 வீடுகளுக்கு புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

32 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டம், நாளொன்றுக்கு 18,000 கன மீட்டர் திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், தலா 1,500 கன மீட்டர் திறன் கொண்ட 03 நீர் தாங்கிகள், 12.75 கிலோமீட்டர் நீளமுள்ள நீரைக் கொண்டு செல்லும் குழாய்க் கட்டமைப்பு மற்றும் 158 கிலோமீட்டர் நீளமுள்ள நீர் விநியோகக் குழாய் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும்

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு 14 வருடங்கள் – ரோஹன ஹெட்டியாராச்சி!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 241 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு!

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube