நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட தேசிய விசேட மெகா போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் நேற்று ஒரே நாளில் 925 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 933 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனைகளில் ஹெரோயின், ஐஸ், குஷ் போதைப்பொருள், போதை மாத்திரைகள் மற்றும் 98,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், சட்டவிரோத மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
