Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – கனடியர்கள் அமைப்பு கோரிக்கை

ஆடி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கனடாவின் டொரொண்டோவை தலைமையிடமாகக் கொண்ட நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனடியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அமைப்பின் பிரதிநிதியான ரோய் சமதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை நெருக்கடி காரணமாக, மெகசின், போகம்பரை மற்றும் கொழும்பு விளக்கமறியல் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் வசதியைக் கொண்டிருந்தாலும், தற்போது சுமார் 40,000 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளதால் கடுமையான நெரிசல் நிலவுகிறது.

1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை மற்றும் 2000ஆம் ஆண்டு பிந்துனுவௌ படுகொலை போன்ற சம்பவங்கள் உட்பட சிறைச்சாலைகளில் வன்முறையான சூழல் உருவாகும் போதெல்லாம் தமிழ் அரசியல் கைதிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

இதனையடுத்து, தமிழ் அரசியல் கைதிகளுக்காக தனித்துவமான பாதுகாப்பு வலயங்களை அமைத்தல், கைதிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் பாதுகாப்பு நிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குதல், ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு தடையற்ற கண்காணிப்பு அனுமதி வழங்குதல் ஆகியன அவசியமாகும்.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவ வேண்டும். மேலும் கோரிக்கை கனடா வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளுக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளிகள் 61,000-ஐ கடந்தது!

ஆடி 6, 2026
இலங்கை

கல்முனையில் சிறுவர்களுக்கு பணம் தருவதாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்த வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

ஆவணி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

அழகியல், விளையாட்டு அனுபவம் ஆரம்பக் கல்வியில் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube