தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசர தொடர்பிலக்கத்தில் தற்காலிக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் ஏதேனும் தீ விபத்துகள் அல்லது அவசர நிலைகள் குறித்து அறிக்கை செய்வதற்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
