Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு

ஆடி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 500,000 ரூபா ஆரம்பகட்ட இழப்பீடு மாத்திரமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 மில்லியனுக்கும் அதிக தொகையை மொத்த இழப்பீடாக வழங்குவது குறித்து திணைக்களம் தற்போது பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிச் சடங்குச் செலவுகள் அனைத்தையும் சிறைச்சாலைகள் திணைக்களமே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இழப்பீடு வழங்குவது குறித்தும் திணைக்களம் அவதானம் செலுத்தி வருகிறது.

காயமடைந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கஜநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

சில பகுதிகளில் மழை; பலத்த காற்றுக்கு எச்சரிக்கை!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: 10 பேர் காயம்

ஆனி 8, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

புதையல் தோண்டிய நால்வர் கைது!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு மலை , நாங்கள் பள்ளத்தாக்கு இறுதியில் மலை பள்ளத்தாக்கில் சரிந்து விடும் – ரோஹித அபேகுணவர்தன

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube