Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்கள் இனி எல்லாத்துறைகளிலும் சாதிக்கலாம்

ஆடி 12, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இலங்கையில் விசேட தேவையுடைய மாணவர்கள் எதிர்வரும் காலங்களில் மருத்துவத்துறை, பொறியியல் துறை மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட துறைகளில் தங்களின் திறமைகளுக்கு ஏற்ற எந்தவொரு துறையிலும் பல்கலைக்கழக உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் விசேட தேவையுடைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும்போது மனிதநேய மற்றும் சமூக அறிவியல் (கலைத்துறை), மேலாண்மை, பௌதிக அறிவியல் மற்றும் உயிரியல் அறிவியல் ஆகிய நான்கு பிரதான துறைகளுக்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையை தற்போதைய அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதோடு, இனிவரும் ஆண்டுகளில் திறமைமிக்க விசேட தேவையுடைய மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற எந்தவொரு உயர்கல்வித் துறையையும் தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க விசேட தேவையுடையோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விசேட சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதோடு, அது மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

அதேபோன்று, நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான செவிப்புலன் குறைபாடுடையோரின் தகவல் தொடர்பாடலுக்குப் பயன்படும் சைகை மொழியை, நாட்டின் ஏனைய மொழிகளான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்று சட்டப்பூர்வமாக்குவதற்கான விசேட சட்டமூலமும் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தவுடன் அதுவும் சட்டமாக்கப்படும்.

மேலும், நாட்டில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விசேட தேவையுடையோரை கொண்ட சுமார் 175,000 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக அரசாங்கத்தினால் மாதாந்தம் 5,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கல்வித் துறையைப் பொறுத்தவரை, பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மற்றும் ஏனைய மாதாந்த அரச நிதியுதவிகள் 100 சதவீதத்துக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, 2026 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக விசேட தேவையுடையோர் பல்கலைக்கழக மாணவர்களுக்காக மாதாந்தம் மேலும் 5,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் சுயலாபங்களுக்காக ஜனாதிபதி நிதியம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், தற்போது அந்த நிதியம் முற்றிலும் மக்களின் அத்தியாவசிய நலன்புரிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது நாட்டின் 17 அரச பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் சுமார் 370 விசேட தேவையுடைய மாணவர்களுக்கும், அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் அனைத்து விசேட தேவையுடையோர் மாணவர்களுக்கும் அவர்களின் முதலாம் ஆண்டிலேயே ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நிதியுதவிகளை நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, இனம், மொழி, பாலினம் அல்லது எவ்வித உடல் ரீதியான குறைபாடுகளும் இன்றி அனைத்துப் பிரஜைகளுக்கும் சமத்துவம் மற்றும் நீதியானதொரு சமூகத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

QR முறைமையை நீக்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை

ஆடி 17, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கழிவறைக் குழிக்குள் இருந்து 30 துப்பாக்கிகள் மற்றும் 5000 தோட்டாக்கள் மீட்பு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube