Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழிலாளர்களின் கட்டாய உழைப்பு இறக்குமதி பொருட்களுக்கு தடை!

ஆடி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தொழிலாளர்களின் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி அகழ்ந்தெடுக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இறக்குமதி செய்யப்படவுள்ள பொருட்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தொழிலாளர்களின் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை அல்லது அகழ்ந்தெடுக்கப்பட்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்காக, இறக்குமதியாளர்கள் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து சான்றளிக்கும் ஆவணங்களைப் பெற வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் கட்டாய உழைப்பைக் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதித் தடையை அமுல்படுத்தத் தவறியதன் காரணமாக, அமெரிக்காவினால் புதிய இறக்குமதி வரி விதிக்கப்பட்ட 60 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த விரிவான அறிக்கை ஜூன் 2ஆம் திகதி அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டது.

குறித்த அறிக்கையில், தொழிலாளர்களின் கட்டாய உழைப்பு இறக்குமதித் தடையை இலங்கை அமுல்படுத்தத் தவறியது நியாயமற்றது எனவும், அதே நேரத்தில் இது அமெரிக்க வர்த்தகத்திற்கு சுமையாகவும் அல்லது தடையாகவும் அமைகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா முடிவுற்ற பருத்தி மற்றும் பருத்தி கலந்த ஆடைகளை நுகரும் நாடாகும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள குறித்த அறிக்கை, இலங்கை உட்பட பத்து நாடுகள் சீனாவுடன் தொடர்புடைய இடைநிலை உற்பத்தியாளர்கள் குறித்த விரிவான ஆய்வையும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பெறுமதி சேர் வரி திருத்தங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல்!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேனா வடிவிலான கைத்துப்பாக்கியுடன் ஓவியர் கைது!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த!

வைகாசி 12, 2026
இலங்கைஎங்கள் ஊர்

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube