Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை 27 கூடுகிறது!

வைகாசி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகள் தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆராய்வதற்கு புதன்கிழமை (27) நாணய நிதியத்தின் இயக்குநர் சபை கூடுகிறது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ, கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும், வெளிநாட்டுக் கையிருப்பு மட்டத்தை வலுப்படுத்துவதிலும், சந்தை மீதான நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்புவதிலும் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு அதிகாரிகளின் இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஊடாக பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் மத்தியிலான நம்பிக்கை வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதனூடாக நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அண்மைக் காலத்தில் பதிவாகியிருக்கும் உலகளாவிய போக்குகள் நாட்டின் பொருளாதாரம் மீது புதிய அழுத்தங்களைத் தோற்றுவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கையின் கொள்கைசார் கட்டமைப்பு கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது முன்னேற்றகரமான நிலையில் இருப்பதாகப் பாராட்டு வெளியிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி சமகால வெளியக அழுத்தங்களைக் கையாள்வது இலகுவான விடயம் அல்ல என்றாலும், தற்போதைய வலுவான கொள்கைக் கட்டமைப்பின் ஊடாக அதனை ஓரளவு சிறப்பாகக் கையாளமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரனை தனியார் வகுப்பு உரிமையாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

ஆடி 27, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மீனவர் ஒருவர் தமிழகத்தில் கைது!

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த 69 குடும்பங்களுக்கு நஷ்டஈடு!

வைகாசி 31, 2026
இலங்கைஉலகம்

கொரியத் தூதுவர் மியோன் லீ பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை!

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube