Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் பதிவு கட்டணங்கள் உயர்வு!

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நிறுவனங்கள் மற்றும் சங்கங்களைப் பதிவு செய்வதற்கான பல்வேறு கட்டணங்களை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கட்டணங்களின்படி, தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனப் பதிவு கட்டணம் 4,600 ரூபாயிலிருந்து 5,200 ரூபாயாகவும், பொதுப் பங்கு நிறுவனப் பதிவு கட்டணம் 23,000 ரூபாயிலிருந்து 26,400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், நிறுவனப் பெயர் அங்கீகாரக் கட்டணம் 2,300 ரூபாயிலிருந்து 2,600 ரூபாயாகவும், ஆண்டு அறிக்கை தாக்கல் கட்டணம் 7,900 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சங்கப் பதிவு கட்டணம் 3,450 ரூபாயிலிருந்து 3,900 ரூபாயாகவும், சங்க அரசியலமைப்புத் திருத்தக் கட்டணம் 1,725 ரூபாயிலிருந்து 1,900 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டணங்கள் 2026 ஜூலை 6ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2496/03 இன் கீழ் அமுலுக்கு வந்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மூன்றாவது நாளாக நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டம் வெற்றி

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்

ஆடி 9, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

சித்திரை 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube