ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா தனது அதிநவீன TU-214PU வான்வழி இராணுவ கட்டுப்பாட்டு விமானத்தை ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவசர காலங்களில் ரஷ்ய அதிபர் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் போர்நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பயன்படுத்தும் இந்த விமானம், செயற்கைக்கோள் மற்றும் மேம்பட்ட தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் தரைவழி தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும் இராணுவ கட்டுப்பாட்டை தொடரும் திறன் கொண்டது.
இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ரஷ்யா விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கையாக சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது.
