இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதுவரை 69951 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த எண்ணிக்கை 33127 ஆக காணப்படுகிறது.
