மட்டக்களப்பு தாழங்குடா 02 பகுதியில் அமைந்திருந்த வீடொன்று நேற்று (13) இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முற்றாக சேதமடைந்துள்ளது.
தீ பரவிய போது வீட்டில் எவரும் இல்லாததால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
