Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை

ஆவணி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்காக வழக்கு இன்று (20) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றம் சாட்டப்பட்ட ஷஷி வீரவன்சவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும்,ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக பிரதம நீதவான் தெரிவித்தார்.

எனினும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஷஷி வீரவன்ச சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தனது சேவை பெறுநர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த மேன்முறையீடு தொடர்பில் அடுத்த மாதம் காரணங்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதால், அதுவரை அவரை முன்பிணையில் விடுவிக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக 42 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை இருப்பதாகவும், அதன்படி அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதைக் கருத்திற்கொண்டு, அதற்கான அறிவிப்புக்கு உட்பட்டு ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த வழக்கை மீண்டும் செப்டம்பர் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்

புரட்டாதி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘நீதிக்கான நீள்பயணம்’ சர்வதேச மாநாடு

ஆவணி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடன் வழங்குநர் மின்னஞ்சல் பொருந்தவில்லை என எச்சரித்தும் மோசடியாளர்களுக்கே பணப்பரிமாற்றம் செய்த அதிகாரிகள்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகரையில் வீதியை விட்டு விலகிய பேருந்து விபத்து

ஆவணி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube