Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு என்னை பதவி விலகச் சொல்லவில்லை

Govt| asked | Outgoing US envoy| Mahinda Samarasinghe|

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்காவிற்கான இலங்கையின் பதவி விலகும் தூதுவரான மகிந்த சமரசிங்க, தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு தம்மை பதவியிலிருந்து விலகுமாறு ஒருபோதும் கோரவில்லை என்றும், மாறாக தொடர்ந்து தனது பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற தனது பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய அவர், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட பல தூதுவர்கள் தங்களது பதவிக்காலம் நிறைவடையும் முன்பே மீள அழைக்கப்பட்டதாகவும், ஆனால் தாம் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் கூறினார்.

“அரசு என்னை பதவியை விட்டு வெளியேறுமாறு கூறவில்லை. மாறாக, தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டது. எனது பதவிக்காலம் முழுவதும் தற்போதைய அரசுடன் சிறந்த ஒத்துழைப்புடன் செயல்பட்டேன்,” என அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து, உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்றிற்கான அனுமதியை பெற்றதாகவும், அமெரிக்க சுங்க வரிகளில் மேலும் குறைப்பு தொடர்பாக இலங்கைக்கு விரைவில் சாதகமான செய்தி கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.

தனது இராஜதந்திரப் பணிக்காலத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதாகக் கூறிய மகிந்த சமரசிங்க, இலங்கைக்கு திரும்பிய பின்னரும் நாட்டுக்காக சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும், எனினும் மீண்டும் அரசியலில் ஈடுபடவோ அல்லது எந்த அரசியல் கட்சியிலும் இணையவோ திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டின் நலனுக்காக அரசாங்கம் தனது உதவியை நாடினால், அரசியல் சார்பற்ற வகையில் பங்களிக்கத் தயங்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உள்நாட்டு யுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கொலை முயற்சிகளில் இருந்து தாம் உயிர் தப்பியதாகவும், நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க தமது உயிரை அர்ப்பணித்த ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு தனது மரியாதையை செலுத்துவதாகவும் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

தென் கொரியா – வட கொரியா போரை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம்!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

புரட்டாதி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேரையும் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு – வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடை

புரட்டாதி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube