இலங்கையின் பிரீமியம் போகவந்தலாவ தேயிலை, சவூதி அரேபியாவின் முன்னணி ஹைப்பர் மார்க்கெட் சங்கிலியான தமிமி மார்க்கெட்ஸ் மூலம் ரியாத்தில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கையின் சவூதிக்கான தூதுவர் அமீர் அஜ்வாத், சிலோன் தேயிலைக்கான முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் சவூதி அரேபியா ஒன்றாக இருப்பதாகவும், இந்த அறிமுகம் அந்நாட்டு சந்தையில் இலங்கையின் உயர்தர தேயிலையின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிமி மார்க்கெட்ஸில் இலங்கை தயாரிப்புகளுக்கென தனியான “Sri Lanka Corner” ஒன்றை அமைக்கவும் அவர் முன்மொழிந்தார்.
