அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்குரிய கொடுப்பனவுகள் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இன்று (15) வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, முதற்கட்டத்தின் கீழ் 1,012,812 பயனாளி குடும்பங்களுக்கு 9,357,346,250 ரூபா (கிட்டத்தட்ட 9.36 பில்லியன் ரூபா) நிதி இன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 211,647 பயனாளி குடும்பங்களுக்கு 2,468,250,000 ரூபா (கிட்டத்தட்ட 2.47 பில்லியன் ரூபா) நிதி உரிய அஸ்வெசும வங்கி கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இன்றைய தினத்தில் மாத்திரம் இவ்விரு கட்டங்களின் கீழும் மொத்தம் 1,224,459 குடும்பங்களுக்காக 11,825,596,250 ரூபா (சுமார் 11.83 பில்லியன் ரூபா) அஸ்வெசும நலன்புரி நிதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
