வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் தமது தொழிற்துறை சார்ந்த பலவிடயங்கள் தொடர்பாக தொழில் துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கண்டியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொழிற் சங்கமாகும். இதில் நாடளாவிய ரீதியில் மூவின தொழிலாளர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
இச்சங்கத்தில் மட்டக்களப்பு, கண்டி, வவுனியா, கிளிநொச்சி, கொழும்பு, ஹட்டன் பிராந்தியத் கிளைத் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் பங்கெடுத்தனர்.
மேற்படி சங்கம் கடந்த 13 ம் திகதி பிரதி தொழில் அமைச்சரை சந்தித்த போது வீட்டு வேலைத் தொழிலாளர் எதிர்கொண்டுள்ள ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் போன்ற விடயங்களுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் இன்னும் பல விடயங்கள் பற்றி இணக்கம் காணப்பட்டதாகவும் மேற்படி அமைப்பின் ஒழுங்கிணைப்பாளர் சுபா கண்டியில் வைத்து தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பாக தமது சங்கம் திருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
