Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காம ஆலயத்தை அடைந்த பாதயாத்திரை பக்தர்கள்

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று (15) புதன்கிழமை அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை சென்றடைந்தனர்.

​வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, கடந்த 10 ஆம் திகதி உகந்தை மற்றும் குமண தேசிய பூங்காவிலிருந்து குமண பூங்கா காட்டுவழிப்பாதை ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டிருந்தது.

​முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய இப்பாதயாத்திரைக் குழுவினர், அடர்ந்த கானகம், மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளையும், கிரவல் மண் பாதைகளையும் கடந்து தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்துள்ளனர்.

வனமுறை வேடன் அருளிய பாரம்பரிய பூஜை முறைகளைப் பின்பற்றி, கானகத்திலும் வழிபாடுகளை முன்னெடுத்து வந்த பக்தர்கள் இன்று ஆலயத்தை வந்தடைந்ததும் பக்தி பரவசத்துடன் கூட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

​இதனிடையே, ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க பெரஹரா இன்று இரவு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

​தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, இவ்வாண்டிற்கான ஆடி வேல் விழா மங்களகரமாக நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 ஆண்டுகளில் 267,138 மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியுள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லவாய பகுதியில் மண்சரிவு!

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும்

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube