Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சவாரிக்குச் சென்றவர் கழுத்தறுத்துக் கொலை; மோட்டார் சைக்கிள் உட்பட பொருட்கள் கொள்ளை!

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோமாகம, கலகாஹேன பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து நேற்று (16) அதிகாலை மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையில், அவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர். ஆடைத் தொழிற்சாலையில் நிரந்தர ஊழியராக பணியாற்றிய அவர், பகுதி நேரமாக ஆன்லைன் செயலி மூலம் வாடகை மோட்டார் சைக்கிள் சேவையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி மாலை வாடகைச் சவாரிக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட அவர், பின்னர் காணாமல் போன நிலையில், அவரது சடலம் கால்வாயொன்றில் இருந்து மீட்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் காணியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உயிரிழந்தவரின் காலணிகள் மற்றும் 20 ரூபாய் பணத்தாள் உள்ளிட்ட சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கொலையாளிகள், அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைத்தொலைபேசி மற்றும் பணப்பையை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்க குட்டிகளுக்கு பெயர் வைக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு!

வைகாசி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சேவைகள் அறிமுகம்

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube