டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் ஒருமுறை விசேட ரூ.15,000 கொடுப்பனவுக்கான நிதியை, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு முழுமையாக விடுவித்துள்ளது.
அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 204,311 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வீதம் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 874 மாணவர்களுக்கு மட்டுமே இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும், இதுவரை ரூ.3,064.67 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை 99.88 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
