Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொத்துவில் கடற்பரப்பில் சீரற்ற வானிலையினால் ஆபத்தில் சிக்கிய மீனவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்பு!

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கியிருந்த உள்நாட்டு மீன்பிடி படகு ஒன்றின் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

பொத்துவில் கடலில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகு தொடர்பாக கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் வழங்கப்பட்ட அவசர அறிவித்தலுக்கு அமைய இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நிலவிய மிகவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும், நேற்று (17) இலங்கை கடற்படையின் ‘விஜயபாகு’ கப்பல் மற்றும் மேலதிக கடற்படைப் படகுகளைப் பயன்படுத்தி அந்த கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் போதே, பொத்துவிலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்த மீனவர் அவரது மீன்பிடி படகில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மீனவருக்கு, இலங்கை கடற்படைக் கப்பலான ‘விஜயபாகு’ மூலம் உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அவர் மிக விரைவாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு கடற்படை பிரிவில் அமைந்துள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) தொடர்சியான ஒருங்கிணைப்புடன், இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கியிருக்கும் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினரைப் பாதுகாப்பதற்காக, இவ்வாறான உடனடி மீட்பு நடவடிக்கைகளை எடுக்க இலங்கை கடற்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் பதிவு கட்டணங்கள் உயர்வு!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரைநூற்றாண்டைக் கடந்த ஆபத்தான பாலம் !

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

ஆனி 26, 2026
இலங்கைவிளையாட்டு

யுபுனின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது – விளையாட்டுத்துறை அமைச்சர்!

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube