Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜன் விவகாரத்தில் மோடியின் தலையீடு கோரி இந்திய தூதுவரிடம் மனோ கோரிக்கை

#அனோஜன் #மோடி #மனோகணேசன் #இந்தியதூதுவர் #இந்தியா #இலங்கை #அனோஜன்விவகாரம் #அரசியல் #ManoGanesan #NarendraModi #SriLanka #India #AnojAn #PoliticalNews

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் விவகாரத்தில், இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக சவூதி அரசாங்கத்தை அணுகி கோரிக்கை விடுத்த பின்னர், இந்திய அரசாங்கம் தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இன்று இந்தியத் தூதுவரை சந்தித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி தலையீட்டை கோரி இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக மனோ கணேசன் தரப்பு தெரிவித்துள்ளது.

இதன்போது, இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு அனோஜன் விவகாரத்திற்கு தீர்வு காண தமிழ் முற்போக்குக் கூட்டணி விரும்புவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனோஜன் விவகாரம் தொடர்பான எழுத்துமூலமான கோரிக்கை ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் மனோ கணேசனுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச் செயலாளர் பரணீதரன் முருகேசு, உப தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கோபி கணேசமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், அனோஜன் சிவராசா தொடர்பான விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிமுறைகளில் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சார்பில் சவூதி மன்னரிடம் மன்னிப்பு கோரும் உத்தியோகபூர்வ கடிதத்தை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

கரூர் சம்பம் தொடர்பில் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற்றது திமுக

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் பொலிஸார் துரத்திச்சென்ற சைக்கிள் விபத்துக்குள்ளானது!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

புரட்டாதி 30, 2026
Breaking Newsஇலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

எரிபொருள் விநியோகத்தில் தொடரும் QR குறியீட்டு முறைமை!

சித்திரை 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube