Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வரி செலுத்தாதவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இறைவரித் திணைக்களம்!

ஆடி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வரி செலுத்த வேண்டியிருந்தும் அதனைத் தவிர்ப்பவர்கள், வரிப் பதிவை மேற்கொள்ளாதவர்கள் மற்றும் வரி அறிக்கைகளை சமர்ப்பிக்காத தனிநபர்கள், நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

2026 ஜூன் 3ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ், சட்டத்துக்கு இணங்கத் தவறும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரும் அதிகாரம் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரிப் பதிவு செய்யாமை, வருமான வரி மற்றும் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறுதல் ஆகியவை சட்டப்படி குற்றங்களாகக் கருதப்படும்.

முதலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு, அதன்பின் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அந்தக் காலப்பகுதிக்குள் சட்டத்துக்கு இணங்கத் தவறினால், நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியாக நிரூபிக்கப்படுபவர்களுக்கு ரூ.400,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்க முடியும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போக்குவரத்து நிலையங்களுக்கு புதிய நிர்வாகம்!

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அதிவேக வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துக்கு!

வைகாசி 22, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சம்மாந்துறையில் முதியவர் நீரில் மூழ்கி மரணம்!

ஆனி 30, 2026
இலங்கை

புத்தூரில் தமிழ் இராணுவ சிப்பாய்க்கு ரூ.15 இலட்சத்தில் புதிய வீடு

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube