இந்திய அரசின் 72வது தேசிய திரைப்பட விருதுகள் (2024-ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள்) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் திரைப்படமான ‘அமரன்’ முக்கியமான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
தேசிய விருதுகளில் அமரன் திரைப்படம் மூன்று விருதுகளை தனதாக்கி கொண்டுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இதேவேளை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த பின்னணி இசையமைப்பாளர் (Best Music Direction – Background Score) விருதை வென்றுள்ளார்.படத்தொகுப்பாளர் கலைவாணன் சிறந்த படத்தொகுப்புக்கான விருதினைஅமரன் திரைப்படம் மூலம் வென்றுள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் உருவான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் அசோக் சக்ரா விருது பெற்ற இந்திய இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். போர்க்களத்தில் அவர் வெளிப்படுத்திய வீரத்தையும், குடும்ப பாசத்தையும், தியாகத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியதற்காக படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தேசிய திரைப்பட விருதுகள் இந்திய சினிமாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விருது கிடைத்ததன் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கும், ‘அமரன்’ படக்குழுவிற்கும் பெருமை சேர்த்துள்ளது என ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
