Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

ஆடி 19, 2026
படிக்க 2 நிமிடங்கள்

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் டெங்கு நோயினால் அதிகளவாக பெண்களே உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 75 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஜனவரி மாதம் முதல் ஜூலை 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 75 ஆயிரத்து 321 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாதத்தில் கடந்த 18 நாட்களில் 19,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 53 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் 39,667 (52.66 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 11,610 (15.41 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தொட்டை, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக தற்போது வரை உயிரிழந்துள்ள நோயாளர்களில் 37 பேர் பெண்கள் எனவும் 5பேர் சிறுவர்கள் எனவும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அரச வைத்தியசாலைகள் பலவற்றில் டெங்கு நோயாளர்கள் வார்டுகள் நிரம்பியுள்ள நிலையில், வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நோயாளர்களுக்கான சிகிச்சைச் சேவைகளை வழங்கிவருகின்றனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவிக்கையில், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களில் 37 பேர் பெண்களாக உள்ளனர். ஆகையால் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் தகுதிவாய்ந்த வைத்தியரை அனுகி ஆலோசனை பெறுவது அவசியம். பெண்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் ஓய்வெடுக்காது வீட்டு வேலைகளில் ஈடுபடுவதால் சிகிச்சை தாமதமாகி, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழப்புகள் சம்பவிப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 843 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்கு மேல் காச்சல் நீடிக்குமாயின் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். கைமருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வைத்திய சிகிச்சையை பெறுவதே சிறந்தது. ஆகையால் டெங்கு பரவலை கருத்தில் கொண்டு சுற்றுபுற சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்பாகும் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வித்யா படுகொலை வழக்கு கைதிகள் மூவரின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது மேல் நீதிமன்றம்!

ஆனி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை குறைத்தது பாகிஸ்தான்!

ஆனி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் பலி!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

QR குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube