Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்!

#DengueAlert #DengueAwareness #HealthAlert #StaySafe #SriLankaHealth #MosquitoControl #DenguePrevention #PublicHealth #HealthUpdate #NewsUpdate

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
டெங்கு அறிகுறிகள் காணப்படுவோர் வீட்டிலேயே தங்காமல், உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும் மருத்துவ முகாமைத்துவ தரநிலை வழிகாட்டி இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் காணுதல், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்குதல், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

டெங்கு பரவல் காரணமாக அண்மைய நாட்களில் பல பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, நடப்பாண்டின் இதுவரையான காலபகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 53 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர, டெங்கு அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே உயிரிழப்புகளைத் தவிர்க்கும் சிறந்த வழி என வலியுறுத்தியுள்ளார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி கொள்வனவு முறைகேடு!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனிவெளி ரயில் மார்க்கத்தின் 2 சேவைகள் இடைநிறுத்தம்

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து – 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொருளாதார மீட்சிக்கு அங்கீகாரம் – உயர்நடுத்தர வருமான நாடாக மீண்டும் இலங்கை

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube