Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

11 நிறுவனங்களுக்கு 1.46 கோடி ரூபாய் அபராதம்!

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளை மீறியமைக்காக, 11 அறிக்கையிடல் நிறுவனங்களுக்கு மொத்தம் 1.46 கோடி ரூபாய் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அறிவித்துள்ளது.

பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைக் தடுப்பதற்கான இலங்கையின் ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்படும் நிதி உளவறிதல் பிரிவு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலப்பகுதியில் இந்த சட்டத்தின் 19(1) மற்றும் 19(2) பிரிவுகளின் கீழ் இந்த அபராதங்களை விதித்துள்ளது.

குறிப்பிட்ட நிறுவனங்களில் கண்டறியப்பட்ட விதிமீறல்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையிலேயே இந்த அபராதத் தொகை தீர்மானிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபராதமாக வசூலிக்கப்பட்ட அனைத்துத் தொகையும், திரட்டிய நிதியத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

அறிக்கையிடல் நிறுவனங்களிடையே சட்ட இணக்கப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நிதியியல் அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்குமான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கம்பஹாவில் கைது!

ஆடி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு திணைக்களத்தில் 98 இலட்சம் மோசடி: ஐடி கட்டுப்பாட்டாளர் கைது

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube