Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடத்தப்பட்ட இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை மறைப்பதற்கும் தப்பிக்க வைப்பதற்கும் உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்திருந்த கட்டளைக்கு அமைய ஆஜரான விஜேகுணரத்ன, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், தான் குற்றமற்றவர் எனவும் வாதிட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த கோட்டை நீதவான் பசான் அமரசேன, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கின் மேலதிக விசாரணைகள் மற்றும் அடுத்தகட்ட வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கேகாலையில் 330 மீ.மீக்கும் அதிக மழை வீழ்ச்சி!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டமாவடியில் வீட்டு முன் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல், சாவகச்சேரி உப தவிசாளர் நீக்கத்துக்கு கண்டனம்

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube