Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

அதிக விலைக்கு அரிசி ,குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

சித்திரை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, கடந்த 24ஆம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை, ஹப்புத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இந்தத் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

கீரி சம்பா மற்றும் ஏனைய அரிசி வகைகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை இதன்போது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக அந்தந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதேவேளை அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ஹப்புத்தளை பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதமும், அநுராதபுரம் பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

121 வருஷத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!

ஆவணி 9, 2026
இலங்கை

நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது – அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதி!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கம் 1854.77 மில்லியன் அ.டொலர் அரசமுறை கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது!

ஆனி 16, 2026
இலங்கை

பிரதான நீர்த்தேக்கங்களில் 63% நீர் சேமிப்பு – சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுரை!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube