Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

புதையல் தோண்டிய நால்வர் கைது!

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அநுராதபுரம் மாவட்டத்தின் கலன்பிந்துனுவெவ – மொறகொட பகுதியில் தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்களை மொறகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், லபுனோருவ பகுதியில் நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக்கொண்டிருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 37, 43, 52 மற்றும் 54 வயதுடைய கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ மற்றும் மொறகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் அநுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட4 இலட்சம் பேர் இதுவரை TIN இலக்கத்தை பெறவில்லை!

ஆனி 15, 2026
இலங்கை

தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்படவில்லை – ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க 

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீட்டு பரணிலிருந்து 3 வயது குழந்தை மீது விழுந்த தந்தை – குழந்தை உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube