கந்தளாய் – ஹபரணை கிதுல் உதுவா பகுதியில், சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று வாகனத்தில் பயணித்தபோது மோட்டார்சக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது இவ் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்த நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் தீயில் முழுமையாக எரிந்து நாசமானது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

