Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்!

ஆனி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, அவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஜனசெத பெரமுன கட்சியின் காரியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய அவர்களே, நாட்டின் பிள்ளைகளைப் பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உயர்தர வகுப்பு மாணவர்களின் தற்போதைய பிரச்சினைகளை ஒரு பொறுப்பான அரச தலைவராகப் புரிந்துகொள்ளுங்கள்.

தற்போது வழங்கப்பட்டுள்ள குறுகிய காலப்பகுதிக்குள் உயர்தரப் பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்து பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களுக்கு மிகவும் கடினமானதொன்றாகும்.

அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் எவ்வகையிலும் போதுமானதாக இல்லை. எனவே, கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற ரீதியில் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, அவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.

உயர்தரப் பரீட்சை எழுதுவது என்பது சாதாரணமான அல்லது இலகுவான காரியமல்ல. நீங்களும் கடந்த காலத்தில் உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்துப் பயின்றிருப்பீர்கள் என்பதால், அந்த மாணவர்களின் மனநிலையை உணர்ந்து இதற்கான தகுந்த தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்

வைகாசி 15, 2026
இலங்கை

கெப் ரக வாகனம் மோதியதில் 6 பேர் பலி

ஆனி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ‘தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி’

வைகாசி 16, 2026
இலங்கைவிளையாட்டு

T20 தொடரை சமன் செய்தது இலங்கை: 2ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி 37 ஓட்டங்களால் அபார வெற்றி!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube