Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளர் ரன்னுளு சந்திரசிறி டி சொய்சாவுக்கு பிணை

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளரான ரன்னுளு சந்திரசிறி டி சொய்சாவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (24) பிணையில் விடுவித்தது.

அதற்கமைய தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் விதித்து நீதிவான் அசங்க எஸ். போதரமக பிணை வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிவான் இதன்போது பயணத்தடை விதித்து பிணையில் விடுவித்திருந்தார்.

தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டில் 16.5 மில்லியன் ரூபா தென் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, தென் மாகாணத்தின் பொது தன்னார்வ தொண்டர் சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறித்த திட்டத்தின் போது, உரிய கொள்முதல் நடைமுறைகளிலிருந்து விலகி, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக செயற்பட்டமை மற்றும் அதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகநபருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு காய்ச்சலால் 15 பேர்பலி

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இலங்கைக்கு எல்நினோ தாக்கம் குறைவாகவே காணப்படும்!

ஆனி 14, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்காவில் துப்பச்சூடு – பொலிஸ் அதிகாரி படுகாயம்!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube