Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

சவுதி இளவரசர் லண்டனில் உயிரிழப்பு!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

லண்டனில் உள்ள பிரபல மெரியட் விடுதியில் சவுதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை முடிவுகள் வெளியாகியுள்ளன.

விடுதி அறையின் குளியலறையில் மயங்கிய நிலையில் இளவரசரை கண்ட பணியாளர்கள், உடனடியாக அவசர மருத்துவ சேவைக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெளியாகியுள்ள உடற்கூற்று பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமான மதுபான அளவு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆபத்தான அளவிலான ‘GHB’ எனப்படும் போதைப்பொருள், கஞ்சா மற்றும் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ‘Xanax’ மாத்திரைகளின் கலவையும் அவரது உடலில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நச்சுப் பொருட்களின் கலவையால் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு அவரது மரணத்திற்கான காரணம் என மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர், மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக இளவரசர் லண்டனில் உள்ள பிரபல மறுவாழ்வு மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், அவரது மரணம் தற்கொலை அல்ல என்றும், அதிகளவிலான போதைப்பொருள் கலவையால் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து மரணம் என்றும் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் விரைவில் நாடு திரும்பவுள்ளனர்!

ஆடி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து: ஈரான் தயார்

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் இனி கருப்புப் பட்டியல்!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் 2 கிலோவுக்கு மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube