Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

ஆடி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

(க.சரவணன்)

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட, இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை (23) லண்டனில் நடைபெற்றது.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, (MSDTE) சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக (13 Hyde Park Gardens, Tyburnia, London W2 2LU) இடம்பெற்றிருந்தது.

1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ,இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கருப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழத் தமிழ் மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமையுடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனிவெளி ரயில் மார்க்கத்தின் 2 சேவைகள் இடைநிறுத்தம்

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

காற்றுமுறிவு – கிழக்கில் அவ்வப்போது மழைபெய்யக்கூடும்

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் பஸ் ஒன்றில் சிக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube