Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கதிர்காமம் செல்லத் தயாரான தாய் விபத்தில் பலி; இரு மகன்கள் காயம்!

ஆடி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்தி அருகே நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது இரு மகன்கள் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளை நோக்கிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பாதசாரியாக இருந்த பெண் மற்றும் அவரது இரு குழந்தைகள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றச் செல்ல தேவையான பொருட்களை வாங்குவதற்காக தம்புள்ளை நகருக்கு வந்திருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த 19 மற்றும் 14 வயதுடைய இரு மகன்களும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த பெண் குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி, எட்டு நாட்களுக்கு முன்பே இலங்கை திரும்பியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக டிப்பர் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஹஜ் பயணத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் அறிவிப்பு!

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெனின்ஜைடிஸ் மூளைகாய்ச்சலினால் 203 பேர் பாதிப்பு!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுதினம் இப்போது திருவிழாக்களாக மாற்றப்பட்டுள்ளது – அருட்தந்தை மா.சத்திவேல்!

வைகாசி 17, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பள்ளி மற்றும் டியூஷன் மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு வழக்கு!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube