ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற லொறி மற்றும் ஜீப் வண்டி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காலை சுமார் 6.30 மணியளவில், கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த லொறியும், ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியும் மோதியுள்ளன. இதில் லொறியில் பயணித்த ஒருவரே காயமடைந்துள்ளார்.
ஜீப் வண்டி தனக்கு முன்னால் பயணித்த காருக்கு வழிவிட முற்பட்டபோது, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
